குருணாகல் மாவட்ட சமூக பாதுகாப்பு விருது வழங்கும் விழா - 2023

அரச ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்தற்றவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்  ஓய்வூதியம் மற்றும் பயன்தொகைத் திட்டத்திற்காக இலங்கை சமூக பாதுகாப்பு சபையில் குருணாகல் மாவட்டத்தில் அதிக பங்களிப்பினை வழங்கிய  அரச உத்தியோகத்தர்களைப் பாராட்டும் “சமூக பாதுகாப்பு விருது வழங்கும் விழா 2023 – குருணாகல்” வைபவம், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கௌரவ தலைவர் சிரேஷ்ட பொறியியலாளர் பி.எஸ்.எஸ். திக்வெல்ல அவர்களின் தலைமையில் 2023.09.19 ஆம் திகதி  குருணாகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது குருணாகல்  மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு உரித்தினைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் பாராட்டப்பட்டனர். இதன்போது ஆரஸ்ஸாவ முன்மொழிவுத் திட்டத்தில் உறுப்புரிமையினைப் பெற்று தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க,பொ.த உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வித் தடைகாண் பயன்தொகைகளை வழங்குதல், வயது 60 வருடங்கள் பூர்த்தியடைந்த முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் என்பனவும் மேற்கொள்ளப்பட்டன.