இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத் தொடர்கள்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது இளைஞர் சமூகத்தை சுயதொழிலில் ஈடுபடுவதற்கும் அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்காக பயிற்சி நிலையங்களை மையமாகக் கொண்டு தொடர்ச்சியான நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு அமைய, பெல்லன்வில மற்றும் கொதட்டுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழிலில் ஈடுபடுவதனை ஊக்குவிக்கவும், தொழில் முயற்சித் திறன்களை விருத்தி செய்யவும் மற்றும் சமூக பாதுகாப்புத்  திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான மேற்படி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.