சமூகப் பாதுகாப்புப் பிரிவு

சமூக பாதுகாப்புப் பிரிவின் முக்கிய பணிகள்
  • ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பயன் திட்டத்தில் விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் செயற்படுத்தல்
  • சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கும், இலக்கு சமூகத்திற்கும் அறிவூட்டுதல்
  • திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்ட பிறகு, உறுப்புரிமையை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
  • தவணைகளை செலுத்துவதற்கான உரிய வழிமுறைகளை செய்தபின் பணம் செலுத்த தேவையான வங்கி வசதி , சந்தாக் கட்டண புத்தகம் ஆகியவற்றை வழங்குதல்
  • உறுப்பினர் பிரச்சினைகளைத் தீர்ப்பது, செயலற்ற உறுப்பினர்களைச் செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.
  • தலைமை அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு பிரிவு மற்றும் 25 மாவட்ட அலுவலகங்களை நிர்வகிப்பதன் மூலம் சேவைப் பணிகளை திறம்பட செய்ய நடவடிக்கை எடுத்தல்.
  • ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளை ஒருங்கிணைத்தல்.
மனித வளம்

உறுதிப் பத்திரச் சேவைகள், ஓய்வூதியங்கள், காப்புறுதி  மற்றும் விளம்பரங்கள்  ஆகியவற்றின் அடிப்படையில் தலைமை அலுவலகத்தில் 04 சேவை அலகுகள் மற்றும், அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்ட 25 அலுவலகங்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன.மாவட்ட அலுவலகங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆளணியினா் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட நடவடிக்கைகளை இயக்கி, ஒருங்கிணைத்து நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நடத்துகின்றனர். பல்வேறு அமைச்சகங்கள், திணைக்களங்கள்  மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்துவதில் அந்த அதிகாரிகளின் தலையீட்டைப் பெற நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • பிரதி பொது முகாமையாளா் (சமூக பாதுகாப்பு)
  • உதவி பொது முகாமையாளா் (ஆட்சேர்ப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம்)
  • உதவி பொது முகாமையாளா் (ஓய்வூதியம்/காப்புறுதி )
  • முகாமையாளர் (உறுதிப்பத் திர சேவைகள்)
  • முகாமையாளர் (காப்புறுதி )
  • சமூக பாதுகாப்பு அதிகாரி (ஓய்வூதியம்)
  • சமூக பாதுகாப்பு அதிகாரி (விளம்பரம் )
  • சிரேஷ்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள்
  • ஒருங்கிணைப்பு அதிகாரிகள்
  • முகாமைத்துவ உதவியாளர்
  • அலுவலக உதவியாளர்