+94 112 886 585 - 86info@ssb.gov.lkதிங்கள் – வெள்ளி: காலை 8:30 – மாலை 4:15
நிதிப் பிரிவு
நிதிப் பிரிவின் முக்கிய பணிகள்
ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் தயாரித்தல்.
ஆண்டு கொள்வனவுத் ( பொருள்/சேவை /வேலை )திட்டம் தயாரித்தல்.
மாதாந்திர கட்டுநிதி தேவை அறிக்கைகளைத் தயாரித்தல் (வருடாந்திர வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்ளல்
திட்டத்தின் அடிப்படையில்).
1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் விதிகளின்படி வருடாந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்தல்
மற்றும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு உரிய அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
திறைசேரி , உரிய அமைச்சு மற்றும் முகாமைத்துவச் செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் நிதி அறிக்கைகளை அவ்வப்போது
தயாரித்தல்.
நிதித்துறை தொடர்பான அனைத்து கணக்குகளையும் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்.
அனைத்து கொடுப்பனவுகள் தொடர்பான வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரித்தல் மற்றும் மாதாந்திர வங்கி கணக்கிணக்க
அறிக்கைகளைத் தயாரித்தல்.
மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பிற அனைத்து பங்களிப்புக் கொடுப்பனவுகளைச் செலுத்துதல் மற்றும் புத்தகங்களில்
கணக்கு வைத்தல்.
பங்களிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதிகளை பயனுள்ள விதத்தில் முதலீடு செய்தல்.
வருடாந்திர பொருட் கணக்கெடுப்புகளை நடத்தி நிறுவனத்திற்கு சொந்தமான நிலையான சொத்துக்கள் பற்றிய அறிக்கைகளை
தயாரித்து சமர்ப்பிக்கவும்.
ஊழியர்களுக்கான மாதாந்திர சம்பளம் மற்றும் தொடர்புடைய அறிக்கைகளைத் தயாரித்தல்.
தேவையான முடிவுகளை எடுக்க நிர்வாகத்திற்கு முறையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குதல்.
ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய உறுப்பினர் பண வைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் வங்கி செய்தல்.
சபைக்குத் தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தேவையான கொள்ளல் நடவடிக்கைகளை மேற்கொள்தல்.
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட சந்தாக்களில் சந்தா கணக்குகளை புதுப்பித்தல்.
வழங்குநர்களின் பதிவு தொடர்பான நடவடிக்கைகளை ஆண்டுதோறும் நடத்துதல்.
ஆசேர்ப்பு ( உறுப்பினர் )மற்றும் சந்தாக்கள் சேகரிப்பு மீதான ஊக்கத்தொகைகளை கணக்கிடுதல் மற்றும் தொடர்புடைய பணம்
செலுத்த தேவையான ஏற்பாடுகளை செய்தல்.
நிறுவனத்தின் மீண்டெழும் செலவுகளுக்குத் தேவையான அனைத்து கட்டணச் செயல்பாடுகளையும் நிர்வகித்தல்.
நிறுவனத்தின் சரக்கிருப்புக்களைப் பராமரித்தல்.
நிறுவனத்தில் செயலற்ற பங்களிப்பாளர்களை செயல்படுத்துவது தொடர்பான திட்டங்களை செயல்படுத்துதல்.
நிறுவன ஊழியர்களால் பெறப்பட்ட கடன்களின் கணக்குகளை பராமரித்தல்.
கலைஞர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் கலைஞர்கள் தொடர்பான நிலையான வைப்பு
கணக்குகளைத் தொடங்குதல்.