உறுதிப் பத்திரச் சேவைகள், ஓய்வூதியங்கள், காப்புறுதி மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமை அலுவலகத்தில் 04 சேவை அலகுகள் மற்றும், அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்ட 25 அலுவலகங்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன.மாவட்ட அலுவலகங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆளணியினா் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட நடவடிக்கைகளை இயக்கி, ஒருங்கிணைத்து நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நடத்துகின்றனர். பல்வேறு அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்துவதில் அந்த அதிகாரிகளின் தலையீட்டைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.