"கலாகரு" ஓய்வூதிய திட்டம்
கலாகரு திட்டம் பற்றி
வயது 23 – 55 இற்கும் இடைப்பட்ட, அரச ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையில்லாத கலைஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட 100% அரச உத்தரவாதம் மற்றும் பாதுகாப்புடனான ஓய்வூதியத் திட்டமாகும். நாடகமாக்கல், நாடக் கலை, சிற்ப வடிவமைப்பு, பாடல் கலை, ஓவியம், செதுக்குதல், மேளம், இசைக்கருவிகள் வாசித்தல், பல்வேறு நடனக் கலைகள், சினிமா கலை, பாரம்பரிய சாந்திகர்மம், அலங்காரக் கலை, தோரணக் கலை, நூலியல் மற்றும் ஆவணக் கலை, இலக்கியம் மற்றும் பொழுதுபோக்கு கலைகள், மேளம் மற்றும் இசைக்கருவி வடிவமைப்பு/தயாரிப்பு, நடனக் கருவி தயாரிப்பு, மரக் கைவினை, திரைக்கதை/பாடல் எழுதுதல், மெள்ளிசை மற்றும் இசை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, அமைவு வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, பின்னணி குரல், தொலைக்காட்சி கலை, தெரு நாடகம், நட்சத்திர மற்றும் ஜோதிடக் கலை போன்ற துறைகளில் உள்ள கலைஞர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம்.
கலாகரு ஓய்வூதிய திட்டத்தின் நலன்கள்
சிறப்பு நலன்கள்
“கலாகரு” ஓய்வூதிய திட்டத்தில் பதிவாகும் அனைத்து கலைஞர்களுக்கும் இலவசமாக ரூ. 50,000/- நிலையான வைப்பு வழங்கப்படும். குறித்த முதலீட்டு தொகையும் அதற்கான வட்டியும், கலைஞர் 60 வயது பூர்த்தி செய்தவுடன் ஒரே முறையில் வழங்கப்படும்.
ஏனைய நலன்கள்
- வயது 60 முதல் வாழ்நாள் முழுவதும் மாதாந்த ஓய்வூதியம்
- வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம்
- மரணப் பணிக்கொடை
- நிரந்தர பகுதி இயலாமை நலன்கள்
- நிரந்தர பூரண இயலாமை நலன்கள்
தகுதி மற்றும் பதிவு
மேற்கண்ட கலைத்துறைகளில் செயல்படும், வயது 23–55 இற்குள் உள்ள அனைத்து இலங்கைக் கலைஞர்களும் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம். பதிவுக்குத் தேவையான ஆதார ஆவணங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.
அரசின் முழு பாதுகாப்பு
கலைஞர்களுக்கான 100% அரச உத்தரவாதம் பெற்ற ஓய்வூதியப் பாதுகாப்பு திட்டம்.
இலவச நிலையான வைப்பு
பதிவுசெய்யும் ஒவ்வொரு கலைஞருக்கும் ரூ. 50,000/- மதிப்பிலான இலவச தொடக்க வைப்பு.
குடும்ப பாதுகாப்பு
வாழ்க்கைத் துணை ஓய்வூதியம், மரண நலன், இயலாமை நலன்கள் மூலம் முழு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.